வலிப்பும் கொரோணா வைரஸும்
எப்படியான பாதிப்பை உருவாக்குகிறது.
நல்ல செய்தி:
கொரோனா வைரஸும் கோவிட் 19 நோயும்
வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட ஆபத்தானது அல்ல.
பிற நோய்களும் சேர்ந்து வந்தால் மாற்றங்கள் ஏற்படும் அதாவது
இது நோயைக் கடுமையாக்கி அபாயத்தை உண்டு பண்ணும்.
வலிப்புக்கு பாவிக்கும் மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை
அரிதாகவே பாதிக்கின்றன.
எனினும் வைரஸ் அனைவருக்கும் ஆபத்தானது.
அதனால் பாதிக்கப்பட்டவர்கள்
மற்றவரையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்தல் வேண்டும்.
வலிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஏனெனில் தடுப்பூசி மூலம் வரும் ஆபத்து
கோவிட் 19 நோய் கொண்டு வருவதை
விட கணிசமாக் குறைவு.
கோவிட் 19 நோய்த் தடுப்பூசி காய்ச்சலை ஏற்படுத்தும், இது சில நேரங்களில்
வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.
எனவேதான் உடல் வெப்ப நிலையைக் மருந்துகள் அல்லது வீட்டு வைத்தியம்
மூலம் குறைக்க பரிந்துரைக்கின்றோம். அது வலிப்புத் தாக்கத்திற்கான முற்பாதுகாப்பாகும்.